திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (16:21 IST)

#GV75: வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் இணைந்த ஜிவி பிரகாஷ்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள சூர்யா 40 படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ் சினிமாவில், வெற்றிமாறன் பொல்லாதவன் , ஆடுகளம் , விசாரணை , வட சென்னை , அசுரன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய திறமையான இயக்குனராக பார்க்கப்படுகிறார்.  
 
கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது. இதனைத்தொடர்ந்து அடுத்து இவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். 
 
சூர்யா 40 என அழைக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளது. இது ஜிவி பிரகாஷிற்கு 75 வது திரைப்படம். வெற்றிமாறனின் அசுரனுக்கும், சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கும் ஜிவி தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜிவி பிரகாஷ் சூர்யாவோடு இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமிது, அதேபோல வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றும் 5வது படமிது. இதனை கொண்டாடும் விதமாக #Suriya40, #GVPrakash என்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.