வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (09:15 IST)

விஷாலை வெறுப்பேற்ற மிஷ்கினுடன் கைகோர்க்கும் ஐசரிகணேஷ்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும், இதனை அடுத்து விஷாலே இந்த படத்தை தொடர்ந்து இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் விஷால் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவரும் மாறி மாறி அறிக்கைகள் விட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். மேலும் நேற்று சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின் விஷாலை தரக்குறைவாக பேசினார் என்பதும் தெரிந்ததே. இதனால் கோலிவுட் திரைஉலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
 
விஷாலை வெறுப்பேற்ற மிஷ்கினுடன் கைகோர்க்கும் ஐசரிகணேஷ்
மேலும் மிஷ்கின், தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைப்பதாகவும், எனவே எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்றும் விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்க விவகாரத்தில் விஷாலுடன் நேருக்கு நேர் மோதிய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் தற்போது மிஷ்கினை வைத்து படம் எடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்
 
மிஷ்கினின் பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரது படங்களின் தரம் குறித்து நான் அறிவேன் என்றும் எனவே மிஷ்கின் தயார் என்றால் அவரை வைத்து படம் தயாரிக்க தான் தயார் என்றும் ஐசரி கணேஷ் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலை வெறுப்பேற்றவே ஐசரிகணேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன