1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (13:26 IST)

படத்தில் நடிக்காட்டியும் பரிசு..! – கூல் சுரேஷூக்கு சர்ப்ரைஸ் குடுத்த ஐசரி கணேஷ்!

Cool Suresh
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கூல் சுரேஷுக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. கடந்த 16ம் தேதி வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. முக்கியமாக இந்த படத்தின் சிம்புவின் வித்தியாசமான நடிப்பு பலராலும் புகழப்பட்டு வருகிறது.

படம் வெற்றி பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிறப்பு பரிசுகளை வழங்கியுள்ளார். இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்ட் பைக்கும், நடிகர் சிம்புவுக்கு காரையும் பரிசளித்துள்ளார்.


இந்த படத்தில் நடிக்காவிட்டாலும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகளவு ஏற்படுத்தியவர் கூல் சுரேஷ். போகும் இடமெல்லாம் “வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்த போடு” என ரைமிங்காய் இவர் பேசி வந்தது தொடர்ந்து வைரலாகி வந்தது.

சிம்பு ரசிகரான கூல் சுரேஷுக்கு பட வெற்றியை தொடர்ந்து சிறப்பு பரிசை அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். புதிய ஆப்பிள் ஐபோனை பரிசளித்த ஐசரி கணேஷ், மேலும் கூல் சுரேஷ் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கூல் சுரேஷ் நன்றி தெரிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.