விவேகம் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்?
விவேகம் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்?
ஒரு வழியாக நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தின் டீஸர் இன்று நள்ளிரவு வெளியானது. டீஸர் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு இண்டெர்போல் ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. வெளியான டீஸரும் அதை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இந்நிலையில் இதில் மற்றொரு சுவாரஸ்யமாக இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
செய்தியில் இணைக்கப்பட்டுள்ள படத்தை நன்கு கவனித்தால் அதில் ஒரு அஜித் லைட்டை நோக்கியும் இன்னொரு அஜித் லைட்டிற்கு புறமாகவும் நிற்பது தெரியும். லைட்டை நோக்கி நிற்கும் அஜித் படத்தை நன்கு உற்றுநோக்கினால் அதில் அவரது இடுப்பு பகுதியில் கூடுதலாக ஒரு ஜோடி கை இருப்பது தெரியும்.
இதன் மூலம் இந்த படத்தில் ஒரு அஜித் ஹீரோவாகவும், மற்றொரு அஜித் வில்லனாகவும் நடித்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகவே கூறப்படுகிறது. இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை.
இருந்தாலும் இரண்டு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாகத்தான் இருப்பார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.