விஜய்க்கும் சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலகியதற்கும் என்ன தொடர்பு?


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 11 ஜூன் 2017 (13:33 IST)
சுந்தர்.சி இயக்கவுள்ள பிரமாண்ட வரலாற்று படம் சங்கமித்ரா. இந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீரென விலகினார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

 
 
படத்தில் இருந்து விலகியதற்கு கால்ஷீட் பிரச்சனை, முழு திரைக்கதை கொடுக்கவில்லை என ஸ்ருதி காரணங்கள் தெரிவித்தார். 
 
ஆனால், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தான் இதற்கு முக்கிய காரணம் என கூரப்படுகிறது. இந்த இரு படங்களையும் தேனாண்டாள் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
 
விஜய் படத்தின் பட்ஜெட் அதிகமாவதால் சங்கமித்ராவிற்கு பண நெருக்கடி வந்துவிட்டதால் தான் ஸ்ருதி படத்தில் இருந்து விலகினார் என கூறப்படுகிறது.
 
ஆனால், சுந்தர்.சி ஸ்ருதி படத்தில் இருந்து விலகவில்லை நாங்கள் தான் அவரை நீக்கினோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி விலகல் குறித்த உண்மையான காரணங்கள் ஏதுவும் தெரியவில்லை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :