பாகுபலி 2 பட்ஜெட் அதிகமானதுக்கு காரணம் இவரா?

Sasikala| Last Modified வெள்ளி, 31 மார்ச் 2017 (16:02 IST)
உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் பாகுபலி. ஏப்ரல் மாதம் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.  மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

 
இந்நிலையில் இப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அனுஷ்காவை வைத்து பாகுபலி முதல் பாகம் படமாக்கப்பட்ட போதே, அவருடைய இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும்  இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி படமாக்கியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்திற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம்  இருந்துள்ளது.
 
இதனால் முதல் பாகத்தின் போது அனுஷ்காவை வைத்து எடுத்த காட்சிகள் மீண்டும் படமாக்கியுள்ளார் ராஜமௌலி. இதனால்  படத்தின் பட்ஜெட், கிராபிக்ஸ் வேலை என்று 20 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட் அதிகமாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :