1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:01 IST)

இதுக்குத்தான் அஜித் அப்பவே ஒதுக்கினாரா...?

எஸ்.ஜெ சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏ.ஆர். முருகதாஸிற்கு  அஜித்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. அஜித் திரைப்பயணத்தையே மாற்றிய படம் தீனா. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலமாக தான் அஜித்திற்கு "தல" என்ற டைட்டில் வந்தது.
 
பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய  ரமணா என்ற படத்தில்  விஜயகாந்த் நாயகனாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு திறமையான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் முருகதாஸ்.ஆனால், இந்தப்படத்தின் கதை நந்தகுமார் என்கிற உதவி இயக்குநரிடம் இருந்து திருடியுள்ளார் முருகதாஸ். பிறகு படத்தை வெளியிட போகும் நேரதில் பூதாகரமான விவகாரத்தைக் கிளப்பியது. 
 
பிறகு அந்த உதவி இயக்குனரை அழைத்த விஜயகாந்த் பணத்தை கொடுத்து விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து படத்தை வெளியிட்டனர். இந்த பிரச்சனை அஜித்துக்கு தெரியவந்ததும் முருகதாஸ் மீது வைத்திருந்த நம்பிக்கை கைவிட்டார் அஜித்.
 
அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்கவேண்டும் என  பல முறை முயற்சி செய்தும் அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை அஜித். என்னதான் விஜய்யை வைத்து 3 படங்கள் இயக்கியிருந்தாலும், அஜித்துடன் மீண்டும் இணையவில்லையே என்ற ஏக்கம் முருகதாஸிற்கு இன்றும் உள்ளது.
 
இதற்கிடையில் ’மிரட்டல்’ என்றதலைப்பில் முருகதாஸ் அஜித்தை வைத்து படம் இயக்கவுள்ளதாக போஸ்டர்கள் வெளியானது.ஆனால் இருவருக்கும் இடையேயான மனஸ்தாபங்களால் அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் அஜித்.
 
தற்போது மீண்டும் சர்க்கார் திருட்டு கதையில் வசமாக சிக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித்தை வைத்து இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.