Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதி படத்துக்கு சிக்கலா?

Cauveri Manickam (Sasi)| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (11:11 IST)
நேற்றிரவு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘கருப்பன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 
 
’ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. தன்யா  ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக நடித்துள்ளார் பாபி சிம்ஹா. இவர்களுடன், கிஷோர், பசுபதி, சிங்கம் புலி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், நேற்றிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக்  கோளாறு காரணமாக வெளியிடப்படவில்லை. எப்போது வெளியாகும் என்ற தகவலையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. இந்தப் படத்தில், ஹீரோயினாக நடிக்க முதலில் ரித்திகா சிங்கும், பின்னர் லட்சுமி மேனனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :