1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (13:43 IST)

பொன்னியின் செல்வனின் ஷாலினி நடிக்கிறாரா? யார்றா கிளப்பிவிட்டது?

நடிகை ஷாலினி அஜித்குமார் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியும் வெற்றியடைந்த வெகு சில நடிகைகளில் ஷாலினி முக்கியமானவர். அதே போல தனக்கான வாய்ப்புகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதே அவர் அஜித்தை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் 21 ஆண்டுகளாக அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் உண்மை இல்லை எனக் கூறுகின்றனர் திரை வட்டாரத்தினர்.