செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:51 IST)

என்கவுண்ட்டருக்கு ஆதரவான படமா ரஜினியின் ‘வேட்டையன்’… டிரைலர் கிளப்பிய சர்ச்சை!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் இணையத்தில் வேட்டையன் டீசரும் வெளியானது.

டீசரில் ரஜினிகாந்த் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது தெரிகிறது. அவர் பேசும் வசனங்கள் என்கவுண்ட்டரை ஆதரிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் அமிதாப் பச்சான் என்கவுண்ட்டருக்கு எதிரான மனித உரிமை அதிகாரியாகவும் காட்டப்பட்டுள்ளார். ஜெய்பீம் படத்தில் காவல்துறை கஸ்டடி துன்புறுத்தல்களைக் காட்டிய ஞானவே அடுத்த படத்திலேயே இப்படி என்கவுண்ட்டர் கொலைகளை நியாயப்படுத்துவது போல படம் எடுக்கலாமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் படம் அப்படி என்கவுண்ட்டர் கொலைகளை நியாயப்படுத்தாது, டீசர் ரசிகர்களைக் கவரும் விதமாக இப்படி உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லி வருகின்றனர்.