வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (08:40 IST)

சுஷாந்த் மரணத்துக்கு வாரிசு அரசியல்தான் காரணமா? வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!

அண்மையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்துக்கு பாலிவுட்டில் நடக்கும் வாரிசு லாபியும் ஒரு காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34)  சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சில பாலிவுட் நடிகர், நடிகையர்களும் சுஷாந்தின் மரணத்துக்கு பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். பாலிவுட் திரையுலகம் திறமையானவர்களை விட ஸ்டார் நடிகர்களின் வாரிசுகளை ப்ரமோட் செய்வதிலேயே குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முன்னணியில் இருப்பவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்தான் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இவர் தயாரிப்பில் சுஷாந்த் நடித்த படத்தை நீண்ட தாமத்துக்குப் பின்னர் நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்து அந்த படம் தோல்வி அடைந்துள்ளது. மேலும் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுஷாந்த் 7 படங்களை இழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு பின் வாரிசு பிரபலங்களின் வேலை உள்ளது என சொல்லப்படுகிறது.

அவர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் இதை தோலுரிக்கும் விதமாக கடந்த ஆண்டு கங்கனா ரனாவத் பேச அது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சுஷாந்த் மரணத்துக்குப் பின் பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியலுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. இம்முறை ரசிகர்களும் இதுபற்றி பேச ஆரம்பித்துள்ளன.