1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (08:33 IST)

தளபதி 65… விஜய்க்கு வில்லன் யார்? உறுதி செய்யாத படக்குழு!

நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்று பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் எந்த நடிகரையும் உறுதி செய்யவில்லை என சொல்லப்படுகிறது. நவாசுதீன் ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.