1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (09:52 IST)

லோகேஷுக்காக கமல் செய்யப்போகும் உதவி… தளபதி 67 ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கமல், ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்காக மொத்தம் 170 நாட்கள் ஷூட்டிங் நடத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 6 மாதம் ஷூட்டிங் நடக்கும் என்பதால் ரிலீஸ் குறித்த சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனை, லோகேஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் வெற்றிக்காக இந்த உதவியைக் கமல்ஹாசன் செய்ய ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.