வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (11:39 IST)

திருமணமான ஹீரோ இளம் பெண்ணுடன் ஓட்டம்!

ரஜினி ரசிகர் மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பால நமச்சிவாயமும், அவரின் மைத்துனர் மணிமாறனும் சேர்ந்து புதுமுகங்களை வைத்து தயாரித்த படம் பயபுள்ள. 


 
இந்த படத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சிவா என்பவர்  அறிமுக  நாயகனாக நடித்திருந்தார். இவர் மனைவி குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில்  மற்றொரு பெண்ணை காதலிப்பதாக கூறி மயக்கி அழைத்து சென்று விட்டதாக காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர். 


 
அந்த பெண்  பி.இ பட்டதாரி எனவும் கூறப்படுகிறது. நடிகர் சிவா  பயபுள்ள படத்தில் நடித்த பின்னர் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


 
இதற்கிடையில் அந்த பெண்ணை மயக்கி புத்தாண்டுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்ட சிவா, அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் தற்போது அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 


மேலும் , ஏற்கனவே திருமணமான சிவா, தங்கள் மகளை மயக்கி அழைத்துச்சென்றதால், தங்கள் மகளின் எதிர்காலமே வீணாகி விட்டது என குடும்பத்தினர் வேதனை தெரிவித்ததோடு தங்கள் மகளை மீட்டுத்தரவேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.