திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (22:35 IST)

ராம்சரணின் அடுத்த படத்தின் #RC16 இயக்குனர் இவர்தான்?

Ram Charan
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் சிறுத்தை, மாவீரன், ஆரஞ்சு, ரச்சா, நாயக்,  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், ராஜமெளலி இயக்கத்தில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்த  ஆர்.ஆர்.ஆர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  இப்படத்தை புச்சி பாபு இயக்க உள்ளதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி, ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறாது.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.