1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (18:46 IST)

சிவகார்த்திகேயனுக்கு இவர் வில்லனா? கம்பேக் கொடுக்கும் விஜய் பட வில்லன்! – வீடியோ வெளியிட்ட படக்குழு!

SK23
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் SK23 படத்தின் வில்லனை வீடியோ வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளது படக்குழு.



தமிழ் சினிமாவில் ரியாலிட்டி ஷோவிலிருந்து வந்து நடிகராக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி படங்கள் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது ஆக்‌ஷன் படங்களாக நடித்து வருகிறார். இவரது ‘அமரன்’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தனது 23வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ளார்.


இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் வில்லனை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல இந்தி நடிகர் வித்யூத் ஜமால்தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

Vidyut Jamwal


அதன்பிறகு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் நண்பராகவும் நடித்திருந்தார். நீண்ட காலமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழில் வில்லனாக கம்பேக் கொடுக்கிறார்.

Edit by Prasanth.K