Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் வீட்டில் புதிதாக வர இருப்பவர் பிந்துமாதவியா?: அதுக்குள்ள ஆர்மியை ஆரம்பிச்சுட்டாங்க!

பிக் பாஸ் வீட்டில் புதிதாக வர இருப்பவர் பிந்துமாதவியா?: அதுக்குள்ள ஆர்மியை ஆரம்பிச்சுட்டாங்க!

ஞாயிறு, 30 ஜூலை 2017 (16:20 IST)

Widgets Magazine

15 பேர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் வெளியேற்றப்பட்டு 9 பேர் தான் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் ஆரம்பித்து 34 நாட்கள் களித்து புதிய போட்டியாளர் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் களம் இறக்குகிறார்கள்.


 
 
நடிகை ஒருவரை பல்லக்கில் தூக்கி வருவது போல நேற்று புரோமோ ஒன்று வெளியானது. ஆனால் அவர் யார் என்பதை காட்டவில்லை. முகம் மட்டும் தெரியாமல் அவரது உடல் தெரிந்தது.
 
இந்நிலையில் புதிதாக களம் இறங்க உள்ள அந்த நடிகை யார் என்பதை அதிகாரப்பூர்வமாக இன்று இரவு தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனாலும் அந்த நடிகை யார் என்பதை நெட்டிசன்கள் கணித்து விட்டனர்.
 
இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர் பிந்து மாதவி தான் என்று நெட்டிசன்கள் தீர்மானித்து விட்டனர். அவர் தான் வர இருக்கிறார் என்பது உறுதியாகும் முன்னரே பிந்துமாதவி ஆர்மியை உருவாக்கியுள்ளனர்.
 
ஓவியாவுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் பலரும் செயல்படுகின்றனர். இந்நிலையில் பிந்துமாதவி போட்டிக்கு வரும் முன்னரே அவரது பெயரில் ஆர்மியை துவங்கி விட்டுள்ளனர். இருந்தாலும் ஓவியா தான் எங்கள் வீட்டு பெண் என ஓவியா ஆர்மி பதிலடி கொடுத்துள்ளது.
 
பிந்துமாதவி பிக் பாஸ் வீட்டிற்கு வரும் பட்சத்தில் வரும் காலங்களில் ஓவியா ஆர்மிக்கும், பிந்து மாதவி ஆர்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வடிவேலை பார்த்து விஜய் சிரிப்பது போல ஜூலியை கலாய்த்த ஓவியா!

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை ...

news

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்; எச்சரித்த கமல்ஹாசன்

நான் அரசியலுக்கு வருவது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்து அமையும் என நடிகர் ...

news

ரஜினி அரசியலுக்கு வர தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என அவரது ...

news

விவேகம் ரிலீஸ் தேதியை உறுதி செய்த அக்‌ஷரா

விவேகம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை சரியாக குறிப்பிடாமல் தயாரிப்பாளர் குழப்பும் ...

Widgets Magazine Widgets Magazine