1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (13:54 IST)

அம்பானிக்கு மட்டும் சினிமா பிரபலங்கள் சொந்தமா...? அபிஷேக் பச்சனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும்,ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் திருமணம்  நடந்தது. இதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் அங்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறினர்.இதில் முக்கியமாக நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்களுக்கு ஐஸ்வர்யா ராய், அமிதாப்,பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், அமீர் கான் உள்ளிட்டோர் உணவு பதார்த்தங்களைப்  பரிமாறினர்.
 
அதனையடுத்து அமீர் கானும், அபிஷேக் பச்சனும் விருந்து பரிமாறும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தம் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் எட்டாவது அதிசயத்தை (ஐஸ்வர்யா ராய்) மணந்தவரும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.அதில் ’சஜ்ஜன் காட் ’என்னும் பாரம்பரிய வழக்கத்தின்படி பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு உணவு பரிமாறுவர் என்று தெரிவித்துள்ளார்.
 
இதை பார்த்து நெட்டிசன்கள் கொதிப்படைந்தனர். அம்பானியின் வீட்டுத்திருமணம் என்பதால் மட்டும் சினிமா பிரபலங்கள் உறவினர்கள் என்று கூறிக்கொள்கின்றனரா...? என்று  தம் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.