1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (20:05 IST)

தெலுங்கில் வசூலை குவிக்கும் விஷால் படம்!

விஷாலின் இரும்புத்திரை திரைப்படம் தெலுங்கில் ரிலீஸாகி வசூலை குவித்து வருகிறது.
 
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான இரும்புத்திரை படத்தில் சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்த படம் கடந்த மாதம் தமிழில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. சினிமா விமர்சகர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர்.
 
இந்நிலையில் இப்படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகி இதுவரை 12 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கில் வெளியாகும் நேரடிப் பட்ங்களை விட அதிக திரையரங்குகள் இப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.