புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (15:31 IST)

இரவின் நிழல் பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார் பார்த்திபன்… அமேசான் ப்ரைம் கொடுத்த ஷாக்!

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு திரையரங்குகளில் வெளியானது.

இதையடுத்து தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதில் படத்தைப் பற்றிய தகவலாக “இந்த படம் உலகின் இரண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் இந்த படத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.