Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கன்னடத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா

Sasikala| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:54 IST)
யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். யாக்கை, நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் பாடல்கள் யுவனின்  ரசிகர்களை நிறைவு செய்திருக்கிறது.

 
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் கூடுதல் மகிழ்ச்சியாக கொலையுதிர்காலம் படத்தை யுவன் தயாரிக்கவும் செய்கிறார். அத்துடன்  கன்னட படமொன்றுக்கு முதல்முறையாக இசையமைக்கிறார். ஆம், யுவன் இதுவரை கன்னடப் படத்துக்கு  இசையமைத்ததில்லை.
 
இந்த வருடம் யுவன் இசையமைத்த யாக்கை, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல முக்கிய படங்கள் வெளிவர உள்ளன.  அத்துடன் அவரது முதல் தயாரிப்பும் வெளியாக உள்ளது. கன்னட படத்திற்கு இசையமைப்பது கூடுதல் போனஸ்.
 
அசத்துங்க இளைய இளையராஜா...


இதில் மேலும் படிக்கவும் :