விஜய்யின் ''வாரிசு'' பட முதல் சிங்கில் பற்றிய தகவல்....
வாரிசு படத்தின் முதல் சிங்கில் குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் இந்த வாரம் வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் பட விழாவில் கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் மகன் சஞ்சய் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தவாரம் வாரிசு அப்டேட் வரும் என்று கூறினார்.
இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Sinoj