வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (13:58 IST)

பிரமாண்டமாக நடைபெற உள்ள இண்டிவுட் திரைப்பட திருவிழா

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இண்டிவுட் திரைப்பட திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.


 
துவக்க விழாவில் தெலங்கானா மாநில சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த இண்டிவுட் திரைப்பட விழாவில் நோக்கம் உலகம் முழுவதிலும் இருந்து வர்த்தக பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், காட்சியாளர்கள் மற்றும் திறமையுடவைர்கள் ஆகியவர்களை உள்ளே அழைப்பதற்காக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த இண்டிவுட் திரைப்பட விழா குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் சோஹன் ராய் தலைமையிலான இண்டிவுட் திட்டம் 2000 இந்திய பில்லியனர்கள் மற்றும் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படுகிறது. சோஹன் ராய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ந்த ஏரிஸ் குழுவின் தலைவர். 
 
இவர் புதிதாக சர்வதேச தரத்தில் 10,000 4K மல்டிபிளக்‌ஷ் திரைகள், 1,00,000 2K/4K வீடு திரையரங்குகள், 8K/4K திரைப்பட ஸ்டூடியோக்கள், 100 அனிமேஷன் மற்றும் VFX ஸ்டூடியோக்கள், திரைப்பட கல்லூரி உள்ளிடவை தொடங்கும் நோக்கத்தில் உள்ளார்.


 
 
பில்லியனர்கள் கிளப்பின் திறப்பு விழா, திரைப்பட திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 பில்லியனர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் திறப்பு விழாவில் கலந்துக்கொள்வார்கள்.
 
இந்த திருவிழாவில் ஆல் லைட்ஸ் இந்தியா சர்வதேச திரைப்பட விழா சார்பில் 50 நாடுகளைச் சேர்ந்த 115க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் பத்ம பூஷன் விருது பெற்ற ஷியாம் பெனிகல் நிகழ்ச்சிக்கு விழா இயக்குநர் செயல்படுவார்.
 
மேலும் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ள திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி இளம் திறமையாளர்களை ஈர்க்கும். நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த திறமை வேட்டை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார்கள்.