திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 மே 2021 (13:44 IST)

ஜூலையில் மீண்டும் தொடங்கும் இந்தியன் 2! தர்மசங்கடத்தில் ஷங்கர்

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பினர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனை அடுத்து சமீபத்தில் ஷங்கர் தரப்பும் லைகா நிறுவனத்தின் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இது குறித்து ஷங்கர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டபோது ’ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் இந்த படத்தை முடித்துக் கொடுப்பதாக தான் தெரிவித்ததாகவும் ஆனால் தயாரிப்பு தரப்பு ஜூன் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தை எட்டி இப்போது படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷங்கரோ அப்போது தனது மகள் திருமணம் மற்றும் ராம்சரண் படத்துக்கான வேலைகளை தொடங்கவேண்டும் என்ப்தால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.