புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (17:37 IST)

பாழடைந்த நிலையில் இந்தியன் 2 செட்ஸ்!

இந்தியன் 2 படத்துக்காக சென்னையில் இரண்டு இடங்களில் போடப்பட்ட அரங்குகள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளன.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியன் 2 திரும்ப எப்போது தொடங்கும் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.,

இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே இந்த படத்துக்காக அமைக்கபட்ட இரண்டு பிரம்மாண்ட அரங்குகள் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பாழடைந்த நிலைக்கு சென்றுள்ளதாம். மேலும் இனிமேல் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தையும் இரண்டு அரங்குகளும் எழுப்பியுள்ளதாம். ஆனால் இந்த அரங்குகளில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.