செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (15:43 IST)

இந்தியன் 2 தற்போதைய பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? பேச்சுவார்த்தையை முடித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தொடங்கியுள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டு வருகிறார். இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்பட்டதற்கு விக்ரம் படத்தின் வெற்றி ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இறுதி பட்ஜெட் இப்போது நிர்ணயிக்கப்பட்டு லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு 230 கோடி ரூபாய் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.