1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (15:51 IST)

’இந்தியன் 2’ வழக்கில் எந்த மனுக்கள் தள்ளுபடி?

’இந்தியன் 2’படத்தை முடித்துவிட்டுதான் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் லைகா மேலும் இரண்டு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது என்பதும் அந்த இடைக்கால மனுக்கள் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் இடைக்கால மனுக்கள் இரண்டை லைகா நிறுவனம் தாக்கல் செய்தது. அதன்படி இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்க கூடாது என்றும், உத்தரவாக தொகையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த இரண்டு மனுக்கள் மட்டும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பதும் ’இந்தியன் 2’ வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.