அறப்போராட்டத்தில் ஆரி

Sasikala| Last Updated: புதன், 15 மார்ச் 2017 (14:43 IST)
சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ள நடிகர் ஆரி, இன்று மதியம் ஒரு அறப்போராட்டத்தை நடத்துகிறார்.

 
 
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம், குறிப்பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுத்தால்  அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை சமீபத்தில் வங்கிகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. இதற்கு, நாடு முழுவதும்  பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதை எதிர்த்தும், அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வலியுறுத்தியும் இன்று மதியம் 2 மணிக்கு  அறப்போராட்டத்தை நடத்துகிறார் ஆரி. ‘அஞ்சல் துறைக்கு மாறுவோம், வங்கிக் கொள்ளையை மாற்றுவோம்’ என்ற இந்த  விழிப்புணர்வு அறப்போராட்டம், சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :