வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (16:35 IST)

தமிழில் வெளியாகும் ஆங்கிலப்படம் ஹாக்சா ரிட்ஜ்

பிரேவ் ஹார்ட், அபோகலிப்டோ, தி பேஷன் ஆஃப் க்ரைஸ்ட் போன்ற முக்கியமான படங்களை இயக்கிய மெல்கிப்சனின் புதிய படம், ஹாக்சா ரிட்ஜ்.

 
போரில் ஒருவரைக்கூட கொல்லாமல் மதிப்புமிக்க விருதுகளை வென்ற அமெரிக்க போர்வீரனின் கதை இது. போரில் மருத்துவ உதவிகள் செய்த அவனது கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.
 
அமெரிக்காவில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் விரைவில் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.