1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (22:03 IST)

தமிழில் தலையெடுத்த ரகுல் ப்ரீத்சிங்

முதல் முயற்சியில் தோற்றுப்போன ரகுல் ப்ரீத்சிங், தன்னுடைய இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். 
‘தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். அந்தப் படங்களும் ஓடவில்லை. இவரையும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் ஒதுங்கினார். அதென்ன மாயமோ தெரியவில்லை… தெலுங்கு ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்துவிட்டது.
 
தற்போது தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ரகுல் ப்ரீத்சிங்கும் ஒருவர். தன்னை ஒதுக்கிய தமிழ் சினிமாவில் எப்படியாவது மார்க்கெட்டைப் பிடித்துவிட  வேண்டும் என்ற வெறி அவருக்குள் இருந்திருக்கும் போல. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். ஆனால், அதுவும்  ஊத்திக்கொள்ள, ‘ராசியில்லாத நடிகை’ என்று கூற ஆரம்பித்தனர்.
ஆனால், அடுத்ததாக ரிலீஸான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அந்தப் பெயரை மொத்தமாக மாற்றிவிட்டது. ‘இவரையா இத்தனை வருடங்களாகக் கண்டு  கொள்ளாமல் விட்டோம்?’ என்று தமிழ் ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத்சிங். அதன்பலனாக, சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே.’, கார்த்தி ஜோடியாக இன்னொரு படம், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம் என பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களுடன் ஜோடி போட்டுள்ளார்.  இனிமேல் அவர் காட்டில் அடைமழை தான் என்கிறார்கள்.