1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (10:32 IST)

பிரபாஸ் பாகுபலி 2வில் இவ்வளவு சம்பளம் வாங்கினாரா?

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த  வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது. படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் ரூ. 121 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

 
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில்  வெளியானது.  படத்தின் முதல் பகுதி 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள நிலையில், இரண்டாவது பாகம் முதல்  நாளிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவருகிறது. இந்தியாவே.. ஏன் உலகமே திரும்பி பார்க்கும்  அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரபாஸ். 5 வருடமாக வேறு படங்கள் எதுவும் ஏற்காமல் இதே படத்தில் தொடர்ந்து நடித்தார்.
 
இந்த படத்திற்கு பிரபாஸ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தான் ரசிகர்கள் பலருக்கும் ஆவலாக உள்ள கேள்வி. முதல்  பாகத்திற்கு மட்டும் பிரபாஸ் வாங்கிய சம்பளம் 20 கோடி ரூபாய், மற்றும் இரண்டாம் பாகத்திற்கு அதை விட மூன்று மடங்கு  அதிகம் சம்பளம் வாங்கியிருக்கிறார் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.