ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2016 (16:29 IST)

மலையாளத்தில் அறிமுகமாகும் சித்தார்த்

மலையாளத்தில் அறிமுகமாகும் சித்தார்த்

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவரும் சித்தார்த் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.


 
 
சித்தார்த் தமிழில் சசியின் புதிய படத்திலும், கப்பல் இயக்குனரின் சைத்தான் கா பச்சா படத்திலும் நடிக்க உள்ளார். அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாராகும் படத்திலும் நடிக்க உள்ளார்.
 
அத்துடன் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திலீப் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக சித்தார்த் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.