1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (13:53 IST)

தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்... டீசர் பற்றிய முக்கிய தகவல்

dhanush vaathi
நடிகர் தனுஷுன் வாத்தி(SIR).  படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  நாளை ரிலீஸாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில், வெங்கட் அட்லூரி  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாத்தி(SIR). இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் vaaththi (SIR). படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர்  நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.