அஜித் 58 அப்டேட்: படத்தில் இணைய போகும் காமெடி நடிகர்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (20:10 IST)
அஜித் தற்போது விவேகம் படத்தின் வேலைகளில் பிஸியாகவுள்ளார். படத்திற்கு டப்பிங் பணிகளை 3 நாட்களில் முடித்தார் எனவும் செய்திகள் வெளியாகியது.

 
 
இப்படத்தின் ஒரு பாடல் அண்மையில் வெளியாகி சாதனைகளை படைத்துவருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பற்றியும் செய்திகள் வெளியாகி வருகிறது.
 
மீண்டும் இயக்குனர் சிவா மற்றூம் அஜித் கூட்டணி ஒன்று சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் புதிய அப்டேட் என்னவெனில் காமெடி நடிகர் இம்மான் அண்ணாச்சி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :