1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (11:25 IST)

என் கருவில் இருக்கும் குழந்தைக்காக சிகிச்சை எடுத்து வருகிறேன்! எமிஜாக்சன்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி ஆகிய படங்களிலும் நடித்து வெற்றி கண்டார்.  சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து மேலும் பிரபலமான இவர் இந்தி, தெலுங்கு என ரவுண்டு அடித்து வந்தார். 
 
இதற்கிடையில் எமி ஜாக்சன் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோ என்வரை காதலித்து வந்தார். இவருக்கு இங்கிலாந்தில் சொந்தமாக பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். மேலும் நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
 
இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "“நான் தாய்மை அடைந்துள்ள இந்த தருணத்தை வீட்டின் மாடியில் நின்று சத்தமாக சொல்ல தோன்றுகிறது. எங்கள் குழந்தையை பார்க்க காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.  திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருப்பது குறித்து எமிஜாக்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும்,  அதை பற்றியெல்லாம்  எமிஜாக்சன் கண்டுகொள்ளவில்லை.
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய எமி , 'நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது , கர்ப்பம் என்று தெரிந்தவுடன் தேவையான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். மேலும் தான் இப்போதும் இந்தியா, இலங்கை, நியூயார்க் என சுற்றி வருவதாகவும் பிறகு எனக்கு பிறக்கும் எனது மகன் அல்லது மகள் என்னுடன் உலகத்தை சுற்றுவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.
 
கூடிய விரைவில் காதலர்  ஜார்ஜை திருமணம் செய்யவுள்ள நடிகை எமிஜாக்சன் தனக்கு பிறக்கவுள்ள குழந்தையை பொறுப்பாக கவனித்து கொள்ளவிருப்பதாகவும், தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.