1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (16:39 IST)

மீண்டும் ஒல்லி பெல்லியாக இலியானா? வைரலாகும் மாடர்ன் புகைப்படம்!

நடிகை இலியானா மீண்டும் ஒல்லியான உடல்கட்டுக்கு மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினர். தமிழில் ‘கேடி’, படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

ஆனால் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் டல் அடித்ததால் பாலிவுட்டிற்கு பறந்தார். பின்னர் அங்குள்ள பிரபல  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்து வந்தார். இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது கணவரை பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
 

இந்நிலையில் திருமணத்துக்குப் பின்னர் குண்டான இலியானா இப்போது தனது உடல் எடையை மீண்டும் பழைய படி குறைத்து வருகிறார். அதையடுத்து சமூகவலைதளத்தில் தனது புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.