1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:35 IST)

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி யாருக்காக?

1000 படங்களை கடந்து இசையமைத்துவிட்ட இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மொழிகளை கடந்து இளையராஜாவின் பாடல்கள் பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுக்கும்.  இந்நிலையில் இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 


 
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 23 ம் தேதி நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
 
இதில் , ரஜினி, கமல், விக்ரம், விஜய்  என பல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நேரில் அழைப்பிதழ்கொடுக்கப்பட்டுள்ளதாம்.
 
இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ 10 கோடி பணத்தை திரட்டி, அதனை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.