வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (21:07 IST)

பிரபல நடிகரின் படத்திற்கு மீண்டும் இசையமைக்கும் இளையராஜா!

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன்.

இவர் சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். அதன்பின்னர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால், குணச்சித்திர வேடங்களில் நடிக்கமால், மீண்டும் கதா நாயகனாக களமிறங்கவுள்ளார். அதன்படி, இவரது 46 வது படத்தை இயக்குனர் கார்த்திக் குமார் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு சமானியன் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதனைத்தொர்ந்து மேலும் பல படங்களில் நடிக்க ராமராஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன்படி, 7 ஆத்ரி பிலிம் பேக்டரி சார்பில் தீன தயாளன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் ராமராஜன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தையும் கார்த்திக்குமார் இயக்கி, கதை எழுதியுள்ளார். அதேபோல் இப்படத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்திற்காக பூஜை  தொடங்கும் என்று கூறப்படுகிறது.