1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (11:12 IST)

யுஎஸ்ஸில் தெலுங்கில் கச்சேரி நடத்தும் இளையராஜா

யுஎஸ்ஸில் தெலுங்கில் கச்சேரி நடத்தும் இளையராஜா

சில வருடங்கள் முன்பு யுஎஸ்ஸில் இளையராஜா இசைக் கச்சேரி நடத்தினார். வரும் செப்டம்பர் மாதம் யுஎஸ்ஸில் ஐந்து இடங்களில் அவர் கச்சேரி நடத்த உள்ளார்.


 
 
செப்டம்பர் 10 -ஆம் தேதி கலிபோர்னியாவில் முதல் கச்சேரி. அதில் முழுக்க தெலுங்கு பாடல்களை மட்டுமே பாடக்போகிறாராம். தெலுங்குப் பாடல்கள் மட்டுமே அதில் இடம்பெறும் (தமிழ் என்ன பாவம் செய்ததோ?). இரண்டாவது டல்லாஸில். மூன்றாவது அட்லாண்டா, நான்காவது நியூ ஜெர்ஸி, ஐந்தாவது வாஷிங்டன் டிசி.
 
முதல் கச்சேரியில் மட்டும் முழுக்க தெலுங்கு. மற்ற நான்கு கச்சேரிகளும் பன்மொழி கச்சேரியாக இருக்குமாம். அதாவது தெலுங்குடன் தமிழ், மலையாளப் பாடல்களும் இடம்பெறுமாம்.