1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (09:03 IST)

இளையராஜாவின் 1417வது படத்தின் டைட்டில் இதுதான்!

இசைஞானி இளையராஜா அவர்கள் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் சுமார் 20 படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் 1417 வது படத்திற்கு இசை அமைக்க அவர் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
 
இந்த படத்திற்கு ’நினைவெல்லாம் நீயடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிராஜன் என்பவர் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
1417 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா விரைவில் 1500 ஆவது படத்துக்கும் இசையமைப்பார் என்றும் அவரது சாதனையை வேறு ஒரு இசையமைப்பாளர் செய்வது சாத்தியமில்லை என்றும் நெட்டிசன் மற்றும் திரையுலகினர் கூறிவருகின்றனர்