வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (16:32 IST)

இப்படி செய்தால்’ சக்திகள் கிடைக்கும் - ரஜினிகாந்த்

இந்திய நடிகர்களின் மிக முக்கியமானவராக உள்ளார் ரஜினி காந்த். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். சென்ற வருடம் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு விடுத்த ரஜினி இன்னும் அரசியலில் ஈடுபாடு காட்டாமல் உள்ளார். ஆனால் சமீபகாலம் வரை அவர் தன் ரசிகர்களுக்கு தொடர்ந்து பேட்ட, 2.0 ஆகிய இரண்டு படத்தைக் கொடுத்து விட்டார்.
இந்நிலையில் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற புத்தக கருத்துக்களை ஒளிவடிவில் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தியாகராய நகரில் நடைபெற்றது. 
 
இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:
 
’கடவுளின் மீது உண்மையான நம்பிக்கையும், பக்தியும் இருந்து யோக பயிற்சி செய்தால் நமக்கு சக்திகள் கிடைக்கும்’ என்றும் பேசினார். மேலும் ஆன்மீக உலகில் 125 வருடங்களாக உலகத்தைப் புரட்டி போட்ட புத்தகம் இது என்று தெரிவித்தார்.