விஜய் சேதுபதிக்கு, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லையாம்…

Cauveri Manickam (Sasi)| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (12:00 IST)
எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என விஜய் சேதிபதி தெரிவித்துள்ளார்.

 
சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘96’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் இவர். 1996ஆம் ஆண்டு, அதாவது ஹீரோ – ஹீரோயின் ஸ்கூல் படிப்பது போன்ற காட்சிகளும் இந்தப் படத்தில் இருக்கிறதாம்.
 
இதற்காக, விஜய் சேதுபதி – த்ரிஷா முகச்சாயல் கொண்ட சிறுவர்களைத் தேடி வந்தனர். ஆனால், அப்படி யாரும் கிடைக்காததால், அவர்களையே நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர். 39 வயதான விஜய் சேதுபதி, ஸ்கூல் பையன் கேரக்டரில்  எப்படி?
 
“ஸ்கூல் பையனாக சின்ன போர்ஷன் மட்டுமே வருகிறது. அந்த சவாலான கேரக்டரில் நடிப்பதில் நான் பெரிதாகப் பயப்பட  வேண்டியதில்லை. ஒரு நடிகனாக, உண்மையாகவும், காதலுடனும் ஸ்கிரிப்ட்டுக்குத் தருவது என் வேலை. மற்றபடி, எதையும்  நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :