தோல்விகள் என்றால் எனக்கு மிகவும் பயம்: நடிகை சமந்தா ஓபன் டாக்!

Sasikala| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (17:09 IST)
நடிகை சமந்தா பேட்டி ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் நகைச்சுவை படங்களிலும், திகில் படங்களிலும் நடிக்க தயாராக  இருக்கிறேன். குறிப்பிட்ட கதை மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற கட்டுப்பாடுகள் என்னிடம் இல்லை.

 
தொடர்ந்து கூறிகையில் இந்த பூமியில் எனக்கு பிடித்தமான இடம்  என்றால் அது எங்கள் வீடுதான். வீட்டில் இருப்பதுபோன்ற சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. படப்பிடிப்பு ஓய்வுகளில் வீட்டில் இருக்கவே விரும்புகிறேன்.
 
மேலும் தோல்விகள் என்றால் மிகவும் பயப்படுகிறேன். இதனால் வாழ்க்கையில் தோல்வி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.  சில நேரங்களில் நான் வருத்தப்படக்கூடிய சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அப்போது ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவேன்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :