ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (17:32 IST)

''அட்லீ ஹாலிவுட் படம் இயக்கினால் அதில் நடிக்க வேண்டும்- யோகிபாபு

'’தமிழ், இந்தி கடந்து ஹாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்க வேண்டும் ‘’என்று அட்லீயிடம் யோகிபாபு  வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான். இப்படத்தின்  ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன

இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன்  மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஏற்கனவே இப்படத்தின் 3 சிங்கில்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இந்த படத்தின் 
ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி   இன்று,  சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்து வருகிறது. அதில் படத்தின் கதாநாயகன் ஷாருக்கான் உள்ளிட் பலர் பங்கேற்றுள்ளனர். தற்போது அனிருத் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வருகிறார்.
 
இந்த நிகழ்ச்சியின்போது மேடையில்பேசிய காமெடி நடிகர் யோகிபாபு,. ‘’தமிழ், இந்தி கடந்து ஹாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்க வேண்டும் ‘’என்று அட்லீயிடம் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், ‘’அந்த  ஹாலிவுட் படத்திலும் தான் நடிக்க வேண்டும்’’ என்று கூறி, சில வார்த்தைகள் இந்தியில் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.