பிக்பாஸ் கால் பண்ணாத வரை சாப்பிட மாட்டேன்; அடம்பிடிக்கும் ஓவியா - வீடியோ!

Sasikala| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (13:27 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா-ஆரவ் காதல் கதையில் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. பிக்பாசில் இந்த  வாரம் முழுக்க ஓவியா காதல் விவகாதத்தில் சற்று ஓவராக நடந்து கொள்வது போன்று தோன்றுகிறது.

 
ஓவியா ஒருவரால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 8 பேரின் நிம்மதி, தூக்கம் கெட்டுப் போகிறது என்கிறார் சக்தி. அதை கேட்ட  காயத்ரியோ சனிக்கிழமை எல்லாம் மாறிவிடும் என்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் நிலைமை, பார்வையாளர்களின்  ஆதரவு பற்றி அறிந்த பிந்து மாதவி ஓவியாவுக்கு ஆதரவாகவே உள்ளார். ஆரவ் விஷயத்தில் கூட ஓவியாவுக்கு அறிவுரை  வழங்கி, ஓவியாவை நார்மலாக்க முயற்சி செய்து வருகிறார்.
 
இதனை தொடர்ந்து இன்றைய ப்ரொமோ வீடியோவில் ஓவியாவை சாப்பிட வைக்க ரைசா, பிந்து மாதவி, காயத்ரி என்று  அனைவரும் முயற்சி செய்கிறார்கள். அவரோ பிக் பாஸ் கால் பண்ணாத வரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :