ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:41 IST)

''சிறை தண்டனை விதித்தால் உள்ளே போகிறேன்'' -புளூ சட்டை மாறன் டுவீட்

'நான் தப்பா பேசியிருந்தா சம்மந்தப்பட்ட நடிகர் வழக்கு தொடுக்கட்டும். அதை எனது வழக்கறிஞர்கள் மூலம் சந்திக்கறேன். சிறை தண்டனை விதித்தால்  உள்ளே போகிறேன்' என்று சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னண் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.  ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான நிலையில் ஒரு வாரம் வசூல் குறித்த நிலவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்  சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது.

அதன்படி,  ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்று  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து புளூ சட்டைமாறன் விமர்சித்திருந்தார். தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’பாக்ஸ் ஆபீசர்கள் மற்றும் யூட்யூப் பெரியப்பாக்கள்.. ஆதாரமின்றி வசூல் கணக்கை அள்ளி விடுகிறார்கள். அதை பலர் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த சாயங்களை வெளுக்க இனி இங்கும் சில படங்களின் அதிகாரப்பூர்வமற்ற பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் (UBOX) வெளியிடப்படும்‌.

அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.

குறிப்பு: ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே உண்மையான வசூலை வெளியிடுகின்றன். அதில்கூட தமிழகத்தின் ஏரியா வாரியான, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு கலக்சன் ப்ரேக் டவுன் ரிப்போர்ட் இருப்பதில்லை. ஆகவே அவற்றையும் முழுமையாக நம்ப இயலாது. ‘’என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், புளூ சட்டைமாறனின் சினிமா விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சினிமா  பிரபலங்கள் யூடியூப் சேனலுக்குப்  பேட்டியளித்து வருகின்றனர்.

இதுகுறித்து புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
இனி பேச்சே இல்லை. வீச்சுதான்:

1. நான் தப்பா பேசியிருந்தா சம்மந்தப்பட்ட நடிகர் வழக்கு தொடுக்கட்டும். அதை எனது வழக்கறிஞர்கள் மூலம் சந்திக்கறேன். சிறை தண்டனை விதித்தால்  உள்ளே போகிறேன்.

2. நான் தரம் தாழ்ந்த விமர்சனம் செய்வதாக  அறிவுரை சொல்லி, எச்சரிக்கை விடுத்த யோக்கிய சிகாமணிகளே.. இந்த உத்தமர்களின்  தரம் குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு வக்கு இருக்கிறதா? இப்போது மட்டும் உங்கள் அறச்சீற்றம் எந்த பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது?

இதற்கு உங்களிடம் பதில் இல்லையென்றால்...  இனி என்னைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லையென்று அர்த்தம். உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் பார்க்கவும். உங்கள் உபதேச வெங்காய மூட்டைகளை அவிழ்க்க வேண்டாம்.

3. முதலில் என் மீது இவர்களில் யாரேனும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வழக்கு தொடுக்கட்டும். அதன்பிறகு அவர்கள் பேசிய பேச்சுகளை ஆதாரமாக வைத்து நான் வழக்கு தொடுக்கிறேன். உதாரணம்:

போலியான வசூல் கணக்கை சொல்லி பொய்க்கணக்கு காட்டுதல், தனிநபரை கொச்சையாக பேசுதல் உள்ளிட்டவை.

ஒவ்வொருவரின் ட்வீட் மற்றும் யூட்யூப் பேட்டிகளுக்கான ஸ்க்ரீன் ஷாட், லிங்க் உள்ளிட்டவை என்னிடம் உள்ளன. நீங்கள் விரைவில் வழக்கு தொடுக்கும் ஆட்டத்தை ஆரம்பியுங்கள். ஐ ஆம் வைட்டிங்.

இதுவரை உங்களைப்பற்றி நான் பேசியதே இல்லை. நீங்கள் வாயை விட்டதற்கு எதிர்வினை மட்டுமே ஆற்றியுள்ளேன். ஆகவே முதல் விசாரணை உங்களிடம் இருந்தே துவங்கும்.

4. இப்படி கொச்சையான Thumbnail வைப்பது, அநாகரீக ஆட்களை பேட்டி எடுப்பது, அதில் பேசப்படும் கொச்சையான வார்த்தைகளை அப்படியே வெளியிடுவது என ஊடக தர்மத்திற்கு எதிராக செயல்படும் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்படும்.

'அனைத்து வார்த்தைகளுக்கும் பங்கேற்பாளர்களே பொறுப்பு. எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை' என பொறுப்பு துறப்பு போட்டு நீங்கள் தப்பி விட இயலாது.

'கண்ணில் சொட்டு மருந்து போட்டதால்.. தெரியாமல் ஷேர் செய்துவிட்டேன்' என்று உச்சநீதிமன்றத்தில் .எஸ்.வி.சேகர் சொன்னதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்த செய்தியை படித்தீர்களா அல்லது ஜெயிலர் பற்றி வடை சுடவே நேரம் போதவில்லையா?

ஆகவே நீதிமன்றத்தில் நீங்கள் சொல்லும் சாக்குகள் எதுவும் பலிக்காது.

5. செய்தி சேனல் விவாத நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்புகையில்... யாரேனும் கொச்சையாக பேசினால் 'வார்த்தைகளில் கவனம் தேவை. இதை அனுமதிக்க இயலாது' என்பார் நெறியாளர்.

அதை மீறி பேசினால் அவரது மைக் அணைக்கப்படும். மேலும் பொங்கினால் அந்த நபரின் திரை நீக்கப்படும் அல்லது அவர் வெளியேற்றப்படுவார்.

அதன்பிறகு ரெகார்ட் செய்யப்பட்ட வெர்ஷன் வரும்போது அந்த நபர் பேசிய கெட்ட வார்த்தைகள் பீப் செய்யப்படும் அல்லது நீக்கப்பட்டிருக்கும்.

இதுதான் ஊடக அறம்.

இதை செய்யாமல்... வீடியோக்களை வெளியிடும் யூட்யூப் சேனல்களின் எடிட்டர்கள்,  நிர்வாகிகள், முதலாளிகள் மற்றும் களத்தில் இருக்கும் ஆங்கர்களே... இதுதான் உங்கள் தரமா?

ரஜினி எனும் நடிகரை புகழ்ந்து தள்ளுங்கள். 1,000 கோடி, 2,000 கோடி வடைகளை சுடுங்கள். ஆனால் அவருக்கு இணையாக என் போன்ற வன்ம கக்கியின்  போட்டோவை Thumbnail ஆக வைத்து ரஜினி மற்றும் உங்கள் சேனலின் தரத்தை இறக்கி கொள்ளாதீர்கள்.

பருந்துகள் பருந்துகளாக வானில் இருப்பதே உங்களுக்கு பெருமை.

6. இனியும் தாமதிக்காமல்  சம்மந்தப்பட்ட நடிகர்கள், யூட்யூப் சேனல்கள் அல்லது அந்த உலகமகா விருந்தினர்கள்... உடனே வழக்கு தொடுக்கவும்.

7. இனி பேச்சே இல்லை. வீச்சுதான் என்பதை செயலில் காட்டுங்கள்.

8. இது உங்கள் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். தன்மானம் இருந்தால் உடனே செயலில் இறங்கவும். வாயில் சுட்ட வடைகள் எல்லாம் போதும்’’ என்று தெரிவித்துள்ளார்.