வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:46 IST)

கபாலி படத்திற்கு பின் மன உளைச்சலில் இருந்தேன் – பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்  பா.ரஞ்சித் தான் கபாலி படத்திற்குப் பின் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறியுள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் யாழி பிலிம்ஸ் நிறுவனம் – நீலம் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம்  நகர்கிறது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் டான்ஸிங் டோஸ் கபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் வரும்  ஆகஸ்ட் 31 ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது, இதில், படக்குழுவினர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பா. ரஞ்சித், அட்டகத்தியில் தொடங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது, வெங்கட்பிரபு சாரிடம்  சென்னை -28 ல் நான் கற்றுக் கொண்டேன், என்னால் நினைத்த படம் எடுக்க முடியும் என்று கற்றுக்கொடுத்தது. சசி சார் என்னை அழைத்து உட்கார வைத்துப் பேசினார்.  ஒரு படத்தை காம்பிரமைஸ் இல்லாமல் எடுக்க முடியும் எனறு வெற்றிமாறன் நிரூபித்தார்.

மேலும், கலைப்புலி தாணு, ஞானவேல் சார் இருவரும் என் வாழ்வில் முக்கியமானவர்கள். கபாலி வெளியானபோது, அவருக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை ஆனால் எனக்காக ஒப்புக்கொண்டார். படம் வெளியான பிறகு இப்படம் பற்றி பேசவில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்தேன்; அப்படத்தின் கலெக்சன் காட்டி எனை ஊக்கப்படுத்தினார்  எனத் தெரிவித்துள்ளார்.