வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (14:56 IST)

இந்தப் படம் பார்த்து கண் கலண்கினேன்- பார்த்திபன் நெகிழ்ச்சி

parthiban
இந்தி சினிமாவில் தங்கல், தாரே ஜாமின் தார், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.
 
ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 
இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் அமீர்கான் ஈடுபட்டுள்ளார்.  இந்த படத்தைப் பார்த்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்,Lal singh Chaddha ‘பார்த்து 
கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன்,
 
“ U r just spreading LOVE through this film to a society where there’s is hatred and negativity”
Amazing movie. அன்பை,அர்ப்பணிப்பை, காதலை,கடமையை கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani  செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு  இப்படம் அவசியம்.தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப….தேசிய விருதுக்கா?”என்ன ஒரு கலை மதிப்பு?
 
பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது எனப் பதிவிட்டுள்ளார்.