வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:34 IST)

ஹாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம்- ஆர்.ஆர்.ஆர். பட நடிகர்

Ram Charan
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் நடிப்பில் வினாயா விதேய ராமா, ஆச்சார்யா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

கடந்தாண்டு ராஜமெளலி இயக்கத்தில், இவர், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் ரூ.1000 கோடி வசூலீட்டி சாதனை படைத்தது.

சமீபத்தில், இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது வென்றது. இவ்விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து ராம்சரண் அளித்த பேட்டியில், ஆர்.ஆர்.ஆர் படம் கோடல்ன் குளோப் வென்றதும், இவ்விருதை கீரவாணி பெற்ற்தும்  மகிழ்ச்சியாக உள்ளது.

ஆசியாவில் கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் பாடலாக தெலுங்கு பாடம் இடம்பிடித்துள்ளது இந்திய மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஹாலிடு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.