திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (22:15 IST)

பத்மாவதியின் ஆடைகள் மீது எனக்கு ஒரு கண்; தீபிகா படுகோனே

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவானது பத்மாவதி திரைப்படம், பத்மாவத் என்ற பெயரோடு கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. பத்மாவத் ராஜ்புத் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி போராட்டங்களும், கலவரங்களும் நடைப்பெற்றன. இந்நிலையில் பாலிவுட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமான பத்மாவத் திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. 
இந்நிலையில் தீபிகா படுகோனே பத்மாவத் படத்தில் தான் அணிந்து நடித்த உடைகளை தன்னிடமே திரும்ப தரும்படி படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா  பன்சாலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இந்த படம் திரைக்கு வந்த போது பெரிய சர்ச்சைகளில் சிக்கியது. தீபிகா படுகோனே தலைக்கு விலையும் நிர்ணயித்து திரையுலகை அதிர வைத்தனர். எதிர்ப்புகளை மீறி படம் திரைக்கு வந்து அமோக வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. தீபிகா படுகோனே இது பற்றி கூறுகையில், சித்தூர்  ராணியாக நடித்தத இந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றும், இப்படத்தில் அணிந்திருந்த உடைகளும், நகைகளும் பாராட்டுகளை பெற்றன. நான் எங்கு போனாலும் அந்த உடைகள், நகைகள் பற்றியே பேசினார்கள். குறிப்பாக கிளைமாக்சில் தீயில் குதித்து இறக்கும்போது நான் அணிந்திருந்த  உடைகளும் என் முகபாவனைகளும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
ரசிகர்களைபோல் நானும் கிளைமாக்சில் அணிந்த உடைகள் மீது எனது மனதை பறிகொடுத்து இருக்கிறேன். எனவே அவற்றை என்னுடனேயே நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்து, அதனை தனக்கு தரும்படி டைரக்டரிடம் கேட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.